"பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை என்றால்.." - ஜாக்டோ ஜியோ அதிரடி அறிவிப்பு
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவராவிட்டால் திட்டமிட்டபடி வரும் 6ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். புதிய ஓய்வூதியத்திட்டம் எந்த வகையிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பயனளிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.