பஸ்சில் சிக்கிய 8கிலோ தங்கம்.. பரபரத்த தமிழக-கேரள எல்லை - வெளியான பரபரப்பு பின்னணி

Update: 2025-12-18 16:16 GMT

தமிழக - கேரள எல்லையான வாளையார் சோதனைச் சாவடியில், 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து கேரள மாநிலம் கொட்டாரக்கரைக்கு சென்ற அரசு பேருந்தில், தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மும்பையைச் சேர்ந்த சங்கீத் ஜெயின், ஹிதேஷ் சிவராம் சாலங்கி ஆகியோரிடம் இருந்து 8 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு ஜிஎஸ்டி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்