ரூ.84 கோடி மதிப்பில் 240 பேருந்துகள் - சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
அரசின் போக்குவரத்து துறை சார்பில் 84 கொடி மதிப்பீட்டில் 240 புதிய பேருந்துகளை கொடி அசைத்து முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.;
சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த விழாவில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு முப்பத்தி ஏழு, அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 103, விழுப்புரத்திற்கு 25, சேலத்திற்கு 10, கோவைக்கு 20, கும்பகோணத்திற்கு 35, மதுரை, நெல்லைக்கு தலா 5 என மொத்தம் 240 பேருந்துகளும் ஒப்படைக்கப்பட்டன. 10 லட்சம் மதிப்பில் இரண்டு அம்மா அரசு நடமாடும் பணிமனைகள் சேவையும் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.