தமிழக அமைச்சரவை கூட்டம் : முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறுகிறது

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.

Update: 2020-01-19 18:47 GMT
2020-21ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரும் பிப்ரவரி மாதம் இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ  தாக்கல் செய்யப்படலாம்  என எதிர்பார்ககப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. அப்போது நிதி நிலை அறிக்கை தயாரிப்பு பணிகள் , ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்,  மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.
Tags:    

மேலும் செய்திகள்