இலங்கை கடலோர காவல் படையினர் தாக்கு - நாகை மீனவர்கள் நால்வருக்கு அடிஉதை

நெடுந்தீவு பகுதிக்கு சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் துரத்திப் பிடித்துள்ளனர்.

Update: 2020-01-19 16:28 GMT
நெடுந்தீவு பகுதிக்கு சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் துரத்திப் பிடித்துள்ளனர். எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடலோர காவல் படையினர் துரத்திய நிலையில், வேகமாக திரும்பிய மீனவர்களின் படகை வழிமறித்து தாக்கியுள்ளனர். ரோந்து கப்பலால் படகை மோதி சேதப்படுத்திய அவர்கள், கயிற்றால் கட்டி இழுத்துச் சென்ற படகு, நடுவழியிலேயே மூழ்கியது. இந்நிலையில், யாழ் நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழ் மீனவர்கள், தங்களை போலீசார் ​தாக்கியதாகவும், பணத்தையும் பறித்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே, கைது செய்யப்பட்ட 4 மீனவர்களும், ஊர்காவல்துறை நீதிபதி உத்தரவின்படி, 31ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்