செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

திருப்பூரில் செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-12-28 20:28 GMT
திருப்பூரில் செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் பிச்சம்பாளைம்புதூர் பகுதியை சேர்ந்தவர் கார்மேகம். இவர், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி, திருப்பூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரிடம், பேச்சுவார்த்தை நடத்தினர். 2 மணி நேரம் கழித்து கீழே இறங்கி வந்த அவரை போலீசார் கைது செய்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்