"பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்" - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து

பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்;

Update: 2019-12-17 02:11 GMT
தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த ப.சிதம்பரம், பொருளாதார வளர்ச்சி 8 சதவீதம் இருந்தால் மட்டுமே வேலை வாய்ப்பை உருவாக்க முடியும் என்றும் 6 சதவீதம் இருந்தால் வேலை வாய்ப்பை தக்க வைத்து கொள்ள முடியும் என்றும் கூறினார். தற்போது  நான்கு சதவீதத்திற்கு கீழ் பொருளாதார வளர்ச்சி  உள்ளதாகவும் இதனால் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் எனவும் சிதம்பரம் தெரிவித்தார். தற்போது உள்ள பொருளாதார நிலைப்படி வரிவிதிப்பை குறைக்க வேண்டும் என்றும், ஆனால் வரி உயர்த்தப்படுவதாகவும் சிதம்பரம் குறிப்பிட்டார். சேலம் உருக்கு ஆலை தனியார்மயம் ஆக்கப்படுவதில் ஊழல் நடைபெறுவதாகவும்  அவர் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ப.சிதம்ரபம் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்