உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு தாக்கல் - அதிமுக சார்பில் மேயர் பதவிக்கு முன்னாள் எம்.பி ப.குமார் விருப்ப மனு
திருச்சியில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்களை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்.பி. ப.குமார் ஆகியோர் விநியோகம் செய்தனர்.;
திருச்சியில், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்.பி.யும், மாவட்ட செயலாருமான ப.குமார் ஆகியோர் விருப்ப மனுக்களை விநியோகம் செய்தனர். அதோடு, மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து ப.குமாரும், அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவஹர்லால் நேருவும் உடனடியாக மனு தாக்கல் செய்தனர்.