Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21.12.2025) | 6AM Headlines | ThanthiTV

Update: 2025-12-21 01:02 GMT
  • தமிழகம் முழுவதும் இரண்டாவது நாளாக இன்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது...வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது...
  • அசாம் மாநிலம் கவுகாத்தியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி ரோடு ஷோ சென்று மக்களை சந்தித்தார்...வழியெங்கிலும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது...
  • தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் வாக்குறுதி அறிக்கை தொடர்பாக சென்னை, பட்டினப்பாக்கம் இல்லத்தில் தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்...தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், பொதுச்செயலாளர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவுடன் விஜய் ஆலோசனை நடத்தினார்...
  • சென்னை அண்ணா சாலை B.S.N.L. அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்...சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு B.S.N.L. சேவை பாதிக்கப்பட்ட சூழலில், சேதம் தொடர்பாக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்...
  • நாமக்கல்லில் ஒரு முட்டையின் விலை 6 ரூபாய் 30 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது....சென்னையில் முட்டை விலை 6 ரூபாய் 95ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது...
Tags:    

மேலும் செய்திகள்