அரசு அலுவலகத்தில் ஆழ்துளை கிணற்றை மூட பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திறந்த நிலையில் காணப்படும், ஆழ்துளை கிணற்றை மூட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்;

Update: 2019-10-29 09:11 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திறந்த நிலையில் காணப்படும், ஆழ்துளை கிணற்றை மூட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சார்பு நீதிமன்றத்திற்கு வரும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் ஆள்துளை கிணற்றின் அருகே அமரும் நிலையில், குழந்தை சுஜித்திற்கு ஏற்பட்ட நிலை அவர்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, பல ஆண்டுகளாக மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணற்றை நிரந்தரமாக மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்