கல்லறை தோட்டத்தில் சுஜித் உடல் அடக்கம்-ஏராளமானோர் அஞ்சலி
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தின் உடல், அழுகிய நிலையில் அதிகாலையில் மீட்கப்பட்டது.;
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தின் உடல், அழுகிய நிலையில் அதிகாலையில் மீட்கப்பட்டது. அதனை தொடர்ந்து மணப்பாறை அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சுஜித்தின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான நடுக்காட்டுப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள பாத்திமா புதூர் கல்லறைத் தோட்டத்தில், கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக சுஜித்தின் உடலுக்கு, ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.