ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள் : ஒரே அமர்வில் விசாரணைக்கு பட்டியலிட கோரிக்கை

அடையாறு, கூவம் ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு அகற்றத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை ஒரே அமர்வில் விசாரணைக்கு விரைந்து பட்டியலிட வேண்டும் என்று உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

Update: 2019-10-23 02:21 GMT
அடையாறு, கூவம் ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு அகற்றத்தை எதிர்த்து  தொடரப்பட்ட வழக்குகளை ஒரே அமர்வில் விசாரணைக்கு விரைந்து பட்டியலிட வேண்டும் என்று உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. 

சுற்றுப்புற சூழலை பேணி காக்கவும் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளவும் நதிகளை சீரமைப்பதும், அதன் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியதும் கட்டாயமாகியுள்ளதாக தமிழக அரசு வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆக்கிரமிப்பு இடங்களுக்கு பட்டா கோரியும், ஆக்கிரமிப்புகள் அகற்றபடுவதை எதிர்த்தும் தொடரப்பட்டுள்ள வழக்குகளின் காரணமாக கூவம் மற்றும் அடையாறு நதிகளை சீரமைக்க முடியாத சூழல் நிலவி 
வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் கண்காணிப்பின் கீழ் நடைபெற்று வரும் சென்னை ஆறுகள் சீரமைப்புக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது, கரையோரங்களில் உள்ள  வணிக மற்றும் குடியிருப்பு சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்தை அணுகி இடைக்கால உத்தரவுகள் பெறுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூவம் மற்றும் அடையாறு நதிகளை மீட்க வேண்டிய முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ஆக்கிரமிப்பு அகற்றத்தை எதிர்த்தும், ஆக்கிரமிப்பு இடத்திற்கு பட்டா கோரியும் தொடரப்பட்டுள்ள  அனைத்து வழக்குகளையும்  பொறுப்பு தலைமை நீதிபதியிடம் அனுமதி பெற்று ஒரே அமர்வில் விரைந்து பட்டியலிட வேண்டும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்