தமிழகத்தில் தொடரும் கனமழை...

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

Update: 2019-10-23 02:09 GMT
கொடைக்கானல் : தொடர் மழை காரணமாக மண் சரிவு



கொடைக்கானலில் தொடர் மழை காரணமாக அடுக்கம் சாலையில் 4 இடங்களில் மிகப்பெரிய மண்சரிவும் ராட்சத பாறைகளும் உருண்டு விழுந்தது. 10க்கும் மேற்பட்ட இடங்களில் சிறிய அளவிலான மண் சரிவும் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது இலகு ரக வாகனங்கள் செல்ல மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி : பல்வேறு இடங்களில் மண் சரிவு



நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால், ஊட்டி, குந்தா, கெத்தை, தேவாலா, தொட்டபெட்டா , அப்பர் பவானி கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பர் பவானி குந்தா அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி 250 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மழை காரணமாக பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. 

திருமங்கலம் : சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது



மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி சுற்றுவட்டார பகுதியில் அரைமணிநேரம் கனமழை சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சேலம் : குடியிருப்புகளுக்குள் புகுந்த மழை நீர் 



சேலத்தில் பெய்த கன மழை காரணமாக தரைப்பாலம் ஒன்று ஓடை வெள்ளத்தில் மூழ்கியது. பல்வேறு இடங்களில் குடியிருப்புகளுக்கும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை : தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம்



கோவை மாவட்டம் காந்திபுரம், உக்கடம் ராமநாதபுரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. 

தொடரும் மழையால் நிரம்பும் வைகை அணை



மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வைகை அணை நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்