"திருச்செந்தூர் ஆவுடையார் குளத்தை சீரமைக்க வேண்டும்" - விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை

திருச்செந்தூர் ஆவுடையார் குளத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-09-23 12:16 GMT
திருச்செந்தூர் ஆவுடையார் குளத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்செந்தூர் மையப்பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது ஆவுடையார் குளம். தாமிரபரணி தண்ணீர் நாயக்கன் குளம் மூலம் இஞ்கு வருகிறது. இதன் மூலம் குமாரபுரம், அரசமரம், தவர கொட்டகை, சாமிகோவில்பத்து, தோப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வந்தன. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இரண்டு போகம் விளைந்த இப்பகுதியில், தற்போது ஒரு போகம் விளைந்தாலே அபூர்வம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு மற்றும் பராமரிப்பின்றியும் ஆவடையார்குளம் மாறியதே, திருச்செந்தூர் பகுதிகளிலுள்ள கிணறுகளில் நீர்மட்டம் குறைந்ததற்கு காரணம் என மக்கள் தெரிவித்தனர். மழை காலத்திற்கு முன்பு குடிமராமத்து பணியை மேற்கொண்டால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, விவசாயமும் செழித்தோங்கும் என்கின்றனர் அப்பகுதி விவசாயிகள்.
Tags:    

மேலும் செய்திகள்