அரசு சுவர்களின் அழகை சிதைப்போருக்கு என்ன தண்டனை ? - பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி

பொது இடங்களின் அழகை சிதைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் 1959-ஆம் ஆண்டின் தடைச் சட்டத்தில் அரசு உரிய திருத்தங்களை செய்து அதை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2019-09-15 09:20 GMT
பொது இடங்களின் அழகை சிதைப்பவர்களுக்கு   கடுமையான தண்டனை வழங்கும் வகையில்,  1959-ஆம் ஆண்டின் தடைச் சட்டத்தில் அரசு உரிய திருத்தங்களை செய்து, அதை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு சுவர்கள் மற்றும் பாலங்களின் அழகை சிதைப்போருக்கு என்ன தண்டனை? என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், பொது இடங்களின் அழகை மேம்படுத்தும் வகையில், அவற்றில் அழகான, தமிழர்களின் கலாச்சாரத்தை விளக்கும் வகையிலான ஓவியங்களை வரைய அரசு முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்