விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்- பலத்த பாதுகாப்பு

விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி, சென்னை மாநகர காவல்துறை சார்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2019-09-07 06:26 GMT
சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சென்னை மாநகரில் 2 ஆயிரத்து 600 சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. அந்த சிலைகள் நாளை முதல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.  இதற்காக பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள மாநகர காவல்துறை, விழாக் குழுக்களுக்கு சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. ஊர்வலத்தின் போது மத உணர்வை தூண்டும் வகையில் பேசக் கூடாது, அனுமதிக்கப்பட்ட வழி தடங்களில் மட்டும் ஊர்வலம் செல்ல வேண்டும்,லாரி அல்லது வேன்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை தவிர, கடற்கரையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஊர்வலத்தை கண்காணிக்க, உயர் தொலைநோக்கி கோபுரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தீயணைப்பு, மருத்துவக் குழு தயார் நிலையில் இருப்பதாகவும், சிசிடிவி கேமிராக்கள் மூலம் முழு கண்காணிப்பு பணிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாநகர காவல்துறை கூறியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்