அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-22 08:58 GMT
அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகம் மற்றும் ஆசிய ஆணழகன் போட்டிகளில் பங்கேற்று தங்கம் பதக்கம் பெற்று நாட்டிற்கு மட்டுமின்றி தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருப்பதாக அவர் பாராட்டினார். இதேபோல் பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு, பல சாதனைகள் புரிந்து, விருதுகள் பெற வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்