மீன் அரவை தொழிற்சாலைகளுக்கு 5 % ஜி.எஸ்.டி. : ரத்து செய்ய கோரி மீனவர்கள் வேலைநிறுத்தம்

மீன் அரவை தொழிற்சாலைகளுக்கு மத்திய அரசு கொண்டு வந்த 5 சதவீத ஜி.எஸ்.டி.யால், தாங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டு வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்

Update: 2019-08-13 10:13 GMT
மீன் அரவை தொழிற்சாலைகளுக்கு மத்திய அரசு கொண்டு வந்த 5 சதவீத ஜி.எஸ்.டி.யால், தாங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டு வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.   கடலில் மீன்பிடித்துவிட்டு மீனவர்கள் கரை திரும்பும் போது, அவர்கள் படகில் உள்ள கழிவு மீன்களை, மீன் அரவை தொழில் செய்யும் நபர்கள் எடுத்து செல்வது வழக்கம். தற்போது இந்த புதிய வரி விதிப்பால், கழிவு மீன் விலை கடுமையாக சரிவடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 350-க்கும் மேற்பட்ட விசை படகு மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்