40 ஆண்டுகளுக்கு பின் தரிசனம் தரும் அத்திவரதர்

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அத்திவரதர் உற்சவம், கோலாகலமாக இன்று தொடங்கியது.

Update: 2019-07-01 02:37 GMT
கடந்த 27ஆம் தேதி, அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை, வசந்த மண்டபம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு, மக்களின் தரிசனத்திற்காக அத்திவரதர் சிலை திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு, அத்திவரதரை தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க, பக்தர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து, அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். இன்று முதல் 48 நாட்களில் 30 நாட்கள் அத்திவரதர் சயனநிலையிலும், 18 நாட்கள் நின்ற நிலையிலும் காட்சி அளிக்கிறார். அத்திவரதர் உற்சவத்தையொட்டி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவ விழா - ஆன்மீக சொற்பொழிவாளர் வெங்கடேச தீட்சிதர் விளக்கம்



காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவ விழா - ஆன்மீக சொற்பொழிவாளர் சதீஷ் விளக்கம்

Tags:    

மேலும் செய்திகள்