மகளிர் காவல் ஆய்வாளரை கைது செய்ய வலியுறுத்தல் : 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போராட்டம்

திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளரை கைது செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-18 02:50 GMT
திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் வசந்திக்கும், வழக்கறிஞர் தியாகு என்பவருக்கும் இடையே வழக்கு தொடர்பாக வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தியாகுவை ஆய்வாளர் வசந்தி தாக்கியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மற்ற காவலர்களும் சேர்ந்து அவரை தாக்கியதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காவல் ஆய்வாளரை கைது செய்ய வலியுறுத்தியும் நுாற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தாங்கள் தாக்கப்பட்டதாக இருதரப்பினரும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதனிடையே காயம் அடைந்த தியாகு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்