லிங்காராசனம் செய்து 10ஆம் வகுப்பு மாணவர் சாதனை : நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் சாதனை பதிவு

வி௫துநகரில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர் ஷ்யாம் கணேஷ்.

Update: 2019-06-15 14:43 GMT
வி௫துநகரில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர் ஷ்யாம் கணேஷ். கடந்த 5 ஆண்டுகளாக யோகாவில் பல சாதனைகளை படைத்து வரும் இவர், 3 முறை தேசிய அளவில் பதக்கம் பெற்றுள்ளார். இந்நிலையில் கைகளை கீழே ஊன்றி காலால் வில் அம்பு எய்தும் லிங்காராசனம் முறை மூலமாக 14 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை1 நிமிடம் 30 வினாடிகளில்  3  முறை எய்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2007 ஆம் ஆண்டு சீனாவை சேர்ந்த பெண் ஒ௫வர் தலைகீழாக நின்று ஒ௫முறை அம்பு எய்து 4 மீட்டர் தொலைவில் இருந்த இலக்கை அடைந்ததே சாதனையாக இ௫ந்தது. தற்போது அந்த சாதனையை மாணவர் ஷியாம் கணேஷ் முறியடித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்