பட்டா, அடிப்படை வசதிகள் இல்லை : தேர்தலை புறக்கணித்த கிராமமக்கள்

நெல்லை பேட்டையை அடுத்த கக்கன் ஜி நகரில் பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-04-18 10:26 GMT
நெல்லை பேட்டையை அடுத்த கக்கன் ஜி நகரில் பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கக்கன் ஜி நகரில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்ககோரி பலமுறை ஆட்சியர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனை கண்டித்து  மக்களவை தேர்தலை அந்தப்பகுதி மக்கள் புறக்கணித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை வட்டாச்சியர் சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார்.ஆனால் உடன்படாத மக்கள் அதிகாரியிடம் வாக்களிக்கமாட்டோம் என மறுப்பு தெரிவித்தனர். இதேபோன்று மருதப்பபுரத்தை சேர்ந்த மக்களும் சாலை வசதி,பேருந்து வசதி ஆகியவை செய்து தராததால் தேர்தலை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்