"செல்போன் அணுகுண்டை போல உள்ளது" - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

செல்போன், கையில் இருக்கும் அணுகுண்டை போல பேராபத்தாக உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.;

Update: 2019-03-15 02:03 GMT
செல்போன்,  கையில் இருக்கும் அணுகுண்டை போல பேராபத்தாக உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. செல்போன்களில் இணைய சேவை வழங்க உரிமம் பெற்றவர்கள்,  Parental window என்ற மென்பொருள் குறித்து ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட கோரி விஜயகுமார் என்பவர் பொதுநல வழக்கை தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர்  செல்போனின் நன்மை ,  தீமைகள் குறித்து தெளிவாக அறியாமல் பயன்படுத்துவதன் விளைவே, பொள்ளாச்சி சம்பவம் போன்ற வருந்தத்தக்க நிகழ்வுகளுக்கு காரணம்  என்று வேதனை தெரிவித்தனர்.  மேலும், இணைய சேவை வழங்குவோர் சங்க செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்