"மேலும் பலர் அ.தி.மு.கவுக்கு வருவார்கள்" - அ.ம.மு.க.வில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் தாமோதரன்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அ.தி.மு.க-வில் இணைந்தார்.

Update: 2019-03-06 20:09 GMT
அ.ம.மு.க.வில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் தாமோதரன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அ.தி.மு.க-வில் இணைந்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதலமைச்சர் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேலும், பலர் அ.ம.மு.கவில் இருந்து விலகி, அ.தி.மு.கவில் இணைவார்கள் என தெரிவித்தார். இதனிடையே,  கொங்குநாடு முன்னேற்ற கழக தலைவர் ராமசாமி, முதலமைச்சரை சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்