இளம்பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றிய கனிமொழி

திமுக சார்பில் கனிமொழி எம்பி கலந்து கொண்ட கிராமசபை கூட்டத்தில், தங்கள் ஊர் நூலகத்துக்கு புத்தகங்கள் வேண்டும் என்ற இளம்பெண்ணின் கோரிக்கையை ஏற்று அங்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

Update: 2019-01-22 01:43 GMT
திமுக சார்பில் கனிமொழி எம்பி கலந்து கொண்ட கிராமசபை கூட்டத்தில், தங்கள் ஊர் நூலகத்துக்கு புத்தகங்கள் வேண்டும் என்ற இளம்பெண்ணின் கோரிக்கையை ஏற்று அங்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டம் குறுக்கு சாலை பகுதியில் கடந்த 18-ம் தேதி திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. எம்.பி.கனிமொழி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இளம்பெண் ஒருவர், தங்கள் கிராமத்தின் நூலகத்துக்கு புத்தகங்கள் கோரினார். இதைத் தொடர்ந்து திமுக சார்பில், 300 புத்தகங்களை கனிமொழி எம்பி அனுப்பி வைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்