குரூப் - 4 தேர்வு : 9,351 காலி பணியிடங்கள், ஜன. 21 முதல் கலந்தாய்வு துவக்கம்

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 8 வகையான பணிகளில் காலியாக இருக்கும் 9 ஆயிரத்து 351 பணி இடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக் கான கலந்தாய்வு, வருகிற 21ம் தேதி சென்னையில் துவங்குகிறது.

Update: 2019-01-10 19:52 GMT
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 8 வகையான பணிகளில் காலியாக இருக்கும் 9 ஆயிரத்து 351 பணி இடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக் கான கலந்தாய்வு, வருகிற 21 ம் தேதி சென்னையில் துவங்குகிறது. தமிழ்நாடு தேர்வாணைய இணையதளத்தில் தகுதி வாய்ந்த நபர்களின் பெயர் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. எனவே, இந்த அழைப்பு கடிதங்களை பதிவிறக்கும் செய்து, சென்னை - T.N.P.S.C அலுவலகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுஉள்ளது. பிப்ரவரி இறுதிக்குள், காலியாக இருக்கும் 9 ஆயிரத்து 351 இடங்களுக் கான பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்