ஜெயலலிதா சொத்து விவரம் - அறிக்கை கேட்பு

ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை வருமான வரி துறையினர், அறிக்கையாக தாக்கல் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கி உள்ளது.

Update: 2019-01-07 20:01 GMT
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஐதராபாத்தில் திராட்சை தோட்டம், வீடு, சென்னை போயஸ்கார்டனில் வீடு மற்றும் கொடநாடு எஸ்டேட் உள்பட 913 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த நிலையில், ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி தொடரப்பட்டிருந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என வருமான வரித்துறை தரப்பில் கோரப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஜனவரி 23 வரை அவகாசம் வழங்கி விசாரணையை தள்ளிவைத்துள்ளனர் அறிக்கையில், ஜெயலலிதாவின் சொத்தின் முழு விவரங்கள், கடன் விவரம், சொத்துக்களின் விற்பனை மதிப்பு என அனைத்தையும் குறிப்பிடுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்