தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட இளம் பெண் பலி...
தஞ்சை மாவட்டம் திருமங்கை சேரி முருகன் கோயில் தெருவை சேர்ந்த சசிகுமார், மற்றும் அவரது மனைவி துர்காவுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.;
தஞ்சை மாவட்டம் திருமங்கை சேரி முருகன் கோயில் தெருவை சேர்ந்த சசிகுமார், மற்றும் அவரது மனைவி துர்காவுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். சசிகுமார் திருமணம் நடந்து ஓராண்டில் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட, மாமனாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக துர்கா பிறந்த வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், 8 ஆண்டுக்கு பின்னர் 4 மாதத்துக்கு முன்பு வீடு திரும்பியுள்ளார். சண்டை குறித்து அறிந்த சசிகுமார், துர்கா வீட்டிற்கு சென்று மனைவியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் துர்கா மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் துர்காவை மீட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இந்நிலையில் சிகிச்சை பலனின்றி துர்கா உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் பந்தநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கணவர் சசிகுமார் மற்றும் மாமனாரை கைது செய்த போலீசார், இருவர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.