மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் எவ்வளவு?

நடப்பாண்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஏழு பேருக்கு மட்டுமே, அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதாக, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.;

Update: 2018-12-10 10:38 GMT
நடப்பாண்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஏழு பேருக்கு மட்டுமே, அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதாக, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

* இது தொடர்பான தகவல்களை ஈஸ்வரன் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற்றுள்ளார்.  அதன் மூலம், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 4 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் படிப்பு கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது. 

* அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்தவர்களில் 3 பேருக்கும், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 20 பேருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.

* தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஒரே ஒரு மாணவருக்குத்தான் இடம் கிடைத்துள்ளது.

* அதேநேரத்தில், சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களில் 611 பேருக்கும், 

* வெளிமாநிலங்களில் பள்ளிப் படிப்பை முடித்த 191 தமிழக மாணவர்களுக்கும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.

* கடந்த ஆண்டு பள்ளி படிப்பை முடித்து விட்டு, பின்னர் ஓராண்டு பயிற்சிக்கு பின் நீட் தேர்வு எழுதியவர்களில், ஆயிரத்து 834 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். மொத்தமுள்ள மூவாயிரத்து 456 இடங்களில் இது 50 சதவீதத்திற்கும் அதிகம் ஆகும்.

* நடப்பாண்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக அரசு கூறிவந்த நிலையில், தற்போது வெறும் 7 பேர் மட்டுமே சேர்ந்துள்ள தகவல் தெரிய வந்துள்ளது.

* அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்குவதற்காக, தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்