நாகநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதேபோல் கடந்த மாதம் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா தொடங்கியது. இதில் 7ம் நாள் விழாவான நேற்று திருக்கல்யாணம் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.