ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் - முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.;
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வரும் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்குதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த உள்ளதாக அவர்கள் தெரிவித்து இருந்தனர். ஆனால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் அரசு செயல்பட்டு வருவதால் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிட வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.