புயல்பாதித்த பகுதிகளில் தொடர்ந்து வேலை பார்க்கும் மின் ஊழியர்களை நேரில் பாராட்டிய வைகோ
புயல்பாதித்த பகுதிகளில் தொடர்ந்து வேலை பார்க்கும் மின் ஊழியர்களை நேரில் பாராட்டிய வைகோ;
புதுக்கோட்டையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கிட இரவு பகல் பாராது அயராது உழைத்து வரும் மின் ஊழியர்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து பாராட்டினார். தொடர்ந்து கஜா புயல் தாக்கத்தால், அடியோடு சரிந்த முந்திரி தோப்பினை, கரடு முரடான பாதைகளில் நடந்து சென்று வைகோ ஆய்வு செய்தார்.