கஜா புயல் பாதிப்பு : தூய்மை குழுக்கள் அமைக்க முதலமைச்சர் உத்தரவு

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குப்பைகள் மற்றும் சேறு சகதிகளை அகற்றும் பணிகளை துரிதப்படுத்த தூய்மை குழுக்களை அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2018-11-25 07:17 GMT
* கஜா புயல், மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் சேர்ந்துள்ள குப்பைகள் மற்றும் கடல்நீர் உட்புகுந்ததால் உண்டான சேர் சகதிகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

* இப்பணிகளை மேலும் துரிதப்படுத்தும் பொருட்டு பிற மாவட்டங்களில் இருந்து ஊரக வளர்ச்சித்துறையின் உதவி இயக்குனர்கள் தலைமையில் தூய்மை குழுக்களை அமைக்க தாம் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் அதில் தெரிவித்துள்ளார்.

* இக்குழுக்கள் பாதிக்கப்பட்ட கிராமங்கள் வாரியாக தூய்மை பணிகளை மேற்கொள்ளவும், ஒவ்வொரு குழுவிலும் 200 தூய்மை பணியாளர்களை பிற மாவட்டங்களில் இருந்து அழைத்து செல்லவும் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

* இக்குழுக்களானது லாரிகள், மின்சார மரவெட்டி, மண்வெட்டி உள்ளிட்ட உரிய சாதனங்களுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று முகாமிட்டு குப்பைகள் மற்றும் சேர், சகதிகளை அகற்றும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும், அவர்களுக்கான உணவு, இருப்பிட வசதிகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தாம்  உத்தரவிட்டுள்ளதாகவும் அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   
   
Tags:    

மேலும் செய்திகள்