நிவாரண பொருட்களுக்கு ரயில் கட்டண விலக்கு அளிக்க கோரிக்கை - பியூஸ் கோயலுக்கு முதலமைச்சர் அவசர கடிதம்

கஜா நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதி உள்ளார்.;

Update: 2018-11-23 11:38 GMT
கஜா நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், புயல் பாதித்த மாவட்டங்களுக்கு ரெயிலில் அனுப்பப்படும்  நிவாரணப் பொருட்களுக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்க வேண்டும்,  நன்கொடையாளர்கள் ரயிலில் அனுப்பும் நிவாரண பொருட்களுக்கு கட்டண விலக்கு வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், கேரள  வெள்ளத்தின் போது  ரெயில் கட்டணத்தில் விலக்கு அளித்தது போல் தமிழகத்திற்கும் விலக்கு அளிக்க வேண்டும்  என கடிதத்தில் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்