வரும் 29ஆம் தேதி சேலத்தில் நடைபெறவுள்ள பாமக பொதுக்குழு கூட்டத்தில், 2026 தேர்தலுக்கான கூட்டணி குறித்து பாமக தலைவர் ராமதாஸ் அறிவிப்பார் என அக்கட்சியின் கவுரவத்தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் பொதுக்குழுவுக்கான லட்சினையை வெளியிட்டபின், அவர் இதனை தெரிவித்தார்.