கஜா புயல் - இருப்பிடத்தை இழந்த வவ்வால்கள்

கஜா புயல் மரங்களை வேரோடு சாய்த்துள்ளதால் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் மரம் கிடைக்காமல் சுற்றிவருகின்றன

Update: 2018-11-19 21:31 GMT
கஜா புயல்  மரங்களை வேரோடு சாய்த்துள்ளதால் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் மரம் கிடைக்காமல் சுற்றிவருகின்றன. வேதாரண்யத்தை அடுத்த மகாராஜபுரம் என்ற இடத்தில் புளிய மரம் ஒன்றில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் தங்குவது வழக்கம். இந்த வவ்வால்களுக்காக கிராம மக்கள் பட்டாசு கூட வெடிப்பது கிடையாது. இந்நிலையில் கஜா புயலுக்கு புளியமரம்  சேதமடைந்ததுள்ளதால்  தங்குவதற்கு இடம் கிடைக்காத வவ்வால்கள் பகல் நேரத்தில் கூட வானத்தில் வட்டமிட்டு வருகின்றன. இப்பகுதியில் 90 சதவீத மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதால் சிறிய மரங்களில்  சில நிமிடங்கள் மட்டுமே அமர்ந்திருக்கும் வவ்வால்கள் தொடர்ந்து வானத்தில் வட்டமிட்டு வருகின்றன. 
Tags:    

மேலும் செய்திகள்