அனுமதிக்கப்பட்ட நேரம் மீறி பட்டாசு வெடிப்பு : 725 வழக்குகள் பதிவு : 15 பேர் கைதாகி விடுவிப்பு
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 725 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.;
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 371 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக, சென்னையில் 4 வழக்குகளை பதிவு செய்துள்ள போலீசார், கடலூர், விழுப்புரம், ராசிபுரம், கொடைக்கானல், நெல்லை, கோவை என பல நகரங்களிலும் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். விருதுநகரில் 13 வழக்குகளை பதிவு செய்த போலீசார், சாத்தூர் - 15, சிவகாசி - 16, அருப்புக்கோட்டை - 7 , திருச்சுழி - 5, ஸ்ரீ வில்லிபுத்தூர் - 12 மற்றும் ராஜபாளையம் 12 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். பல இடங்களில், பிடிபட்ட சிறுவர்கள், எச்சரிக்கை செய்யப்பட்டு, அவர்களுக்கு பதிலாக பெற்றோர்கள் கைது செய்யப்பட்டனர். ராசிபுரத்தில் கைது செய்யப்பட்ட ஏசி மெக்கானிக், சித்தேஸ்வர பிரபு என்பவர், பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.