நக்கீரன் கோபாலை காண அனுமதி மறுப்பு : தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் வைகோ கைது

சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து நக்கீரன் கோபாலிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-10-09 07:16 GMT
சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து நக்கீரன் கோபாலிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நக்கீரை கோபாலை பார்ப்பதற்காக, அங்கு சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, காவல் நிலையம் முன்பு போலீஸார் தடுத்து நிறுத்தனர். அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், தன்னை வழக்கறிஞர் என்ற முறையில் உள்ளே அனுமதிக்குமாறு கேட்டுகொண்டார். போலீஸார் அனுமதிக்காததை தொடர்ந்து, தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
 
தர்ணா போராட்டம் - வைகோ கைது இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட வைகோவை போலீஸார் கைது செய்தனர். சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட வைகோவுக்கு, ஆதரவாக அவரது கட்சியினர் உள்ளிட்ட சிலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்நிலையில், வைகோவை கைது செய்த போலீஸார், அவரை வேனில் ஏற்றிச்சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்