மணல் கடத்தலை கண்காணிக்க சென்ற உதவி ஆய்வாளர் கரடி கூட்டத்தால் தாக்கப்பட்ட பரிதாபம்...

கன்னியாகுமரியில் நள்ளிரவில் மணல் கடத்தலை கண்காணிக்க சென்ற உதவி ஆய்வாளர் கரடி கூட்டத்தால் தாக்கப்பட்டுள்ளார்.

Update: 2018-09-29 08:09 GMT
கன்னியாகுமரியில் நள்ளிரவில் மணல் கடத்தலை கண்காணிக்க சென்ற உதவி ஆய்வாளர்,கரடி கூட்டத்தால் தாக்கப்பட்டுள்ளார். ஆரல்வாய்மொழி அருகே பொய்கை அணை பகுதியில் மணல் கடத்தும் கும்பலை பிடிக்க, மணல் கடத்தல் பிரிவு உதவி ஆய்வாளர் திலீபன் தலைமையில், போலீசார் அணை பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த 12க்கும் மேற்பட்ட கரடி கூட்டம், அவரை தாக்கியுள்ளது. கரடி கூட்டத்தை விரட்டிய போலீசார், திலீபனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்