மளிகை கடையில் கல்லூரி மாணவர்கள் நூதன மோசடி

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள மளிகை கடையில் போலி பே.டி.எம். ஆப் மூலம் 3 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2018-09-11 20:30 GMT
துரைப்பாக்கத்தில் சரவணன் என்பவர் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இவரது கடையில் பொருட்களை வாங்கி பே.டி.எம்.ஆப் மூலம் பணம் செலுத்துவது வழக்கம். இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்படாததை கண்டு சரவணன் அதிர்ச்சியடைந்துள்ளார். வங்கி மற்றும் பே.டி.எம் ஆப் ஊழியர்களிடம் விசாரித்துவிட்டு மாணவர்களிடம் விசாரித்துள்ளார். 

அப்போது கல்லூரி மாணவர்கள் டேனியல் மற்றும் கிசாந்த் போலி பே.டி.எம் ஆப் மூலம் பணத்தை செலுத்தி வந்தது தெரியவந்தது. கடந்த 3 மாதங்களில் 2 லட்சத்து 80 ஆயிரம் வரை மாணவர்கள் மோசடி செய்துள்ளனர். சம்பவம் குறித்து சரவணன் அளித்த புகாரின் பேரில், இரு மாணவர்களையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்