மெரினாவில் போராட்டங்கள் நடத்த அனுமதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-09-03 06:01 GMT
கடந்த ஏப்ரல் மாதத்தில், மெரினா கடற்கரையில், தொடர்ந்து 90 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி கோரி, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜா, ஒருநாள் மட்டும் போராட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த தமிழக அரசு, உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையாக திகழும் மெரினா கடற்கரையின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, அங்கு போராட்டம் நடத்த அனுமதிக்க கூடாது என வாதிட்டது. வாதத்தை கேட்ட நீதிபதி மணிக்குமார், அய்யாக்கண்ணுவின் போராட்டத்திற்கு அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்தார். இதனிடையே வழக்கு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், சுப்பிரமணியன் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, போராட்டம் நடத்துவது தனிமனித உரிமை தான் என்றாலும், பொது அமைதியை பேணிக் காக்க வேண்டியதும் அவசியம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டனர்.




Tags:    

மேலும் செய்திகள்