வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நாய் - உயிரை பணயம் வைத்து மீட்ட தீயணைப்புதுறையினர்
பதிவு: ஆகஸ்ட் 20, 2018, 10:03 AM
* நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்துள்ள பட்லூர் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கில் நாய் ஒன்று சிக்கி தவிப்பதாக அப்பகுதி மக்கள் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

* இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், கரைபுரண்டு ஓடும் ஆற்றில், உயிரை பணயம் வைத்து, நாயை மீட்டனர். மீட்கப்பட்ட நாய்க்கு, ராணி என பெயர்சூட்டிய பொதுமக்கள் தீயணைப்பு துறையினரை பாராட்டி வருகின்றனர்.