கடலில் கலக்கும் காவிரி நீரை வேளாண்மை மற்றும் குடிநீர் பயன்படுத்த வேண்டும் - ஸ்டாலின்

கடலில் கலக்கும் காவிரி நீரைத் தடுத்து வேளாண்மை மற்றும், குடிநீர் தேவைகளுக்கு திருப்பி விடுமாறு தமிழக அரசை, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2018-08-19 11:29 GMT
* மேட்டூர் அணை இருமுறை முழு கொள்ளளவை எட்டியும், அங்கிருந்து திறந்து விடப்படும் காவிரி நீர், வேளாண்மைக்கும், குடிநீர் தேவைகளுக்கும் பயன்படாமல் நேராகக் கடலில் கலப்பது மிகுந்த வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார்.

* நீர் மேலாண்மைக்காக சுமார் 4 ஆயிரத்து 735 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்தும், இன்றைக்கு நூற்றுக்கணக்கான டி.எம்.சி. காவிரி உபரி நீர் கடலில் கலக்கிறது என்றால், செலவழித்த பணம் எங்கே போனது? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

* பல கோடி ரூபாய் செலவழித்தும், ஏரி, குளங்கள், அணைகளை முறையாக சீரமைக்காமல், விவசாயத்திற்கு தேவைப்படும் உபரி நீர் விரையமாவதற்காக, அதிமுக அரசுக்கு  கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

* இனியாவது, தொலைநோக்கு 'நீர் மேலாண்மை' திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்தும், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நதிநீர் இணைப்புத் திட்டங்களை நிறைவேற்றியும்,கடலில் கலக்கும் காவிரி நீரை தடுத்து வேளாண்மைக்கும், குடிநீர் தேவைகளுக்கும் திருப்பி விடுமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்வதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்