"கேரளாவிற்கு தேவையான உதவிகள் வழங்க வேண்டும்" - ஸ்டாலின் கோரிக்கை

கேரள அரசுக்கு தேவையான நிர்வாக ரீதியான ஒத்துழைப்பையும், நிவாரண மற்றும் நிதியுதவிகளையும் வழங்கிட தமிழக அரசு முன் வர வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.;

Update: 2018-08-18 11:24 GMT
இயற்கை பேரிடரில் சிக்கித் தவிக்கும் கேரள அரசுக்கு தேவையான நிர்வாக ரீதியான ஒத்துழைப்பையும், நிவாரண மற்றும் நிதியுதவிகளையும் வழங்கிட தமிழக அரசு முன் வர வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், பெருந்துயரத்தில் சிக்கித் தவிக்கும் கேரள மக்களுக்கு நேசக்கரம் நீட்டி, அவர்களுக்கு தேயைான உதவிகளை செய்து தர மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் கூறியுள்ளார். கேரள மக்களுக்காக  நிவாரண உதவிகள் வழங்கும் பணிகளில் திமுகவினர் ஈடுபடு வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்