இந்தியா-ஆஸி கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - இந்தியா த்ரில் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் வென்று உள்ளது.

Update: 2021-01-19 09:28 GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் வென்று உள்ளது. பிரிஸ்பேனில் நடந்த இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 369 ரன்களும், இந்தியா 336 ரன்களும் அடித்தன. இதனைத் தொடர்ந்து, 2-ஆவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா, 294 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. பின்னர் 328 ரன்கள் இலக்குடன் 2-ஆவது இன்னிங்சை இந்தியா ஆடியது. போட்டியின் கடைசி நாள் ஆட்டமான இன்று, தொடக்க வீரர் சுப்மான் கில், அபாரமாக ஆடி, வலுவான அடித்தளம் அமைத்தார். 91 ரன்களுக்கு அவர் ஆட்டம் இழந்த நிலையில், நிதானமாக ஆடிய புஜாரா அரைசதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து புஜாராவும் பெவிலியன் திரும்பிய நிலையில், ரிஷப் பண்ட் மற்றும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இருவரும் அதிரடியாக ஆடினர்.  97 ஓவர்களில், 7 விக்கெட்டுகளை இழந்து, இந்தியா இலக்கை கடந்தது. 89 ரன்கள் அடித்த பண்ட், இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்தார். இந்த வெற்றிமூலம், டெஸ்ட் தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி உள்ளது. மேலும், தொடர்ச்சியாக 3 முறை பார்டர்-கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றி சாதனையும் படைத்து உள்ளது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்தியா, கைப்பற்றி உள்ள நிலையில், இந்திய அணிக்கு, பிசிசிஐ, 5 கோடி ரூபாயை வெகுமதியாக அறிவித்து உள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, இந்திய கிரிக்கெட் அணிக்கு இது மிகச் சிறந்த தருணம் என்றும், திறமையை வெளிப்படுத்தி, இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடியதாகவும் தெரிவித்து உள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்