உலகக் கோப்பை கபடி தொடர் - சாம்பியன் பட்டம் வென்றது பாகிஸ்தான்

உலகக் கோப்பை கபடி தொடர் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

Update: 2020-02-17 08:30 GMT
உலகக் கோப்பை கபடி தொடர் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. லாகூரில் நடைபெற்ற CIRCLE கபடி தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 43க்கு41 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது.  இதன் மூலம் உலகக் கோப்பை CIRCLE கபடி தொடரின் இறுதிச் சுற்றில் முதல் முறையாக இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனிடையே,  பாகிஸ்தானில் நடைபெறும்  கபடி போட்டியில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அனுமதியின்றி இந்தியா என்ற பெயரையும், தேசிய கொடியையும் பயன்படுத்தி வீரர்கள் பாகிஸ்தான் சென்றது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்