"தேர்தல் ஆணையம் பாஜகவின் கட்சி அலுவலகம் போல் செயல்படுகிறது" - சீமான் குற்றச்சாட்டு

Update: 2024-03-29 04:25 GMT

தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் கட்சி அலுவலகம் போல் செயல்படுவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிஃபரை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நாம் தமிழர் கட்சி வளர்ந்து வருவது மற்றவர்களுக்கு பிடிக்காமல் சின்னம் உள்ளிட்ட விவகாரங்களில் பிரச்சனை ஏற்படுத்துவதாக கூறினார். மேலும், தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் கட்சி அலுவலகம் போல் செயல்படுவதாக கூறிய அவர், அண்ணாமலையின் வேட்புமனு தவறாக இருந்த போதிலும், கோவை தேர்தல் அலுவலர் அண்ணாமலையின் வகுப்பு தோழர் என்பதால் அதனை நிராகரிக்காமல் ஏற்றுக் கொண்டதாக கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்