சீண்டி விட்ட ப.சிதம்பரம்...கோபத்தில் வெடித்த அமித் ஷா - "உங்களுக்கு என்னங்க பிரச்சினை"

Update: 2024-04-23 07:48 GMT

குடியுரிமை திருத்த சட்டம் எப்போதும் நடைமுறையில் இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.கேரளாவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் குடியுரிமை திருத்த சட்டம் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ரத்து செய்யப்படும் என தெரிவித்திருந்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 1960ஆம் ஆண்டு முதலே, தாஜா அரசியலை காங்கிரஸ் ஆயுதமாக பயன்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்டினார். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் என்ன குறைபாடுகள் உள்ளது என்பதை சிதம்பரம் தெரிவிக்காமல் வெறுமனே அதனை நாங்கள் ரத்து செய்வோம் எனக் கூறுவது ஏன் என கேள்வி எழுப்பினார். தாங்கள் யாருக்கும் எந்தவித அநீதியும் இழைக்க மாட்டோம் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு என்ன பிரச்சfனை என வினவிய அவர், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மக்களை தவறாக வழி நடத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்