ஸ்டார் தொகுதியில் என்ட்ரி கொடுக்கும் முதல்வர் ஸ்டாலின்...அதிரும் வட தமிழகம்

Update: 2024-03-29 06:43 GMT

முதலமைச்சர் ஸ்டாலின், இன்று தருமபுரியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். மக்களவை தொகுதியில் போட்டியிடும் தர்மபுரி, கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குசேகரிக்க உள்ளார். தருமபுரி மாவட்டம் தடங்கம் பகுதியில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பேச உள்ளார். சென்னையில் இருந்து மாலை 4 மணியளவில் விமானம் மூலம் சேலம் செல்லும் முதல்வர் மு.க ஸ்டாலின், அங்கிருந்து சாலைமார்க்கமாக தருமபுரி செல்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்