அதிமுக மாநாடு நாளை நடைபெறும் நிலையில், மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரையில், அதிமுக மாநாடு நாளை, மதுரையில், வலையங்குளம் கருப்புசாமி கோயில் அருகே நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுகவினர் பேருந்துகள், வேன்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் மதுரைக்கு புறப்பட்டுள்ளனர்.இதையடுத்து, மதுரையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவினர் மாநாட்டு இடத்தை அடைவதற்கான வழிகளை போலீசார் அறிவித்துள்ளனர். இதேபோன்று, தனியார் இலகுரக வாகனங்களும், கனரக சரக்கு வாகனங்கள் செல்வதற்கான மாற்று பாதை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று விமான நிலையத்திற்கு செல்வதற்கான பாதையும் அறிவிக்கப்பட்டுள்ளது.